உலகம் முழுதும், உலக காதுகேளாதோர் கூட்டமைப்பின் புள்ளிவிபரத்தின்படி, 7. 5 கோடி செவித்திறன் குறைபாடு உடையோர் உள்ளனர். வளரும் நாடுகளில், 80 சதவீதம் பேர் செவித்திறன் குறைபாடு உடையோராக உள்ளனர்.
உலகம் முழுதும், 330க்கு மேற்பட்ட வெவ்வேறு சைகை மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலக சுகாதார இயக்கத்தின் கணக்கீட்டின்படி, இந்தியாவில் 6. 3 கோடி மக்கள் செவித்திறன் குறைபாடு மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உடையோர் ஆவர். இது, இந்திய மக்கள் தொகையில், 7. 3 சதவீதம் ஆகும். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, செப்டம்பர் 23ம் தேதியை, குறையுடையோர் அனைவருக்கும் ஒரே மொழி சைகை மொழி; அதுவே அவர்களுக்கு தாய்மொழி என அறிவித்தது. அதனால், அன்றைய தினம் சைகை மொழி தினமாக கொண்டாப்படுகிறது.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தின வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார். இதில், மாற்றுத்திறனாளிகள், காது கேளாதோர் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.