காஞ்சிபுரத்தில் இருந்து, பொன்னேரிக்கரை சாலை சீரமைப்பு பணிகள், 1. 30 கோடி ரூபாய் செலவில் நிறைவு பெற்று உள்ளன. இந்த பணியால், சாலையின் உயரம் அதிகரித்து உள்ளது. இதனால், சாலையின் இடதுபுறம் மண் கொட்டவும், மீடியனின் உயரம் அதிகரிக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னையில் இருந்து, காஞ்சிபுரம் நகருக்குள் செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, மீடியனை தாண்டி செல்லும் அபாயம் உள்ளது. இது தவிர, புதிதாக போடப்பட்ட சாலையின் இருபுறமும் மண்ணை அணைக்காததால் வாகனங்கள் கவிழும் அபாயமும் உள்ளது.
எனவே, புதிதாக போடப்பட்ட பொன்னேரிக்கரை சாலை நடுவே, மீடியனின் உயரத்தை உயர்த்தவும், சாலை இருபுறமும் மண்ணை கொட்டி வாகன விபத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்து உள்ளது. 0