காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், வளர்ந்து வரும் மருத்துவம் மற்றும்பல்துறை ஆய்வுகள் பற்றியதேசிய மருத்துவ கருத்தரங்கம் மற்றும் முதலுதவி குறித்த இணையதள விளக்கக் காட்சி நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜசேகர் கருத்தரங்கை துவக்கி வைத்தார். கண்காணிப்பாளர் க. பூபதிமுன்னிலை வகித்தார். கருத்தரங்கின் தொடக்க நிகழ்வாக கல்லுாரி நிறுவனர் ராதாகிருஷ்ணன் நினைவக ஆய்வுக் கூடத்தில் அவசர சிகிச்சை வகுப்பு பயிற்சி நடைபெற்றது.
சவீதா மருத்துவக் கல்லுாரியின் உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மருத்துவர் ஏழுமலை மற்றும் மத்திய ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானிகளால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இப்பயிற்சி வகுப்பில் 69 பேர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் மருத்துவ அறிவியல், இணை சுகாதார அறிவியல், மனிதநேய அறிவியல், தொழில்சார் சிகிச்சை உள்ளிட்ட 9 தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பங்கேற்ற பிரதிநிதிகளால் 30 மருத்துவ அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.