கிதிரிப்பேட்டை ரயில் சிக்னல் மாற்றி அமைக்கும் பணி துவக்கம்

63பார்த்தது
கிதிரிப்பேட்டை ரயில் சிக்னல் மாற்றி அமைக்கும் பணி துவக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் புறவழிச் சாலைக்கு, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு, சிக்னல் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் ராஜவீதி வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, சதுக்கம் வழியாக வாலாஜாபாத் - வண்டலுார் சாலை வழியாக, தாம்பரம் செல்லும் வாகனங்கள் செல்கின்றன.

ஒரே நேரத்தில், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் எதிர் வரும் வாகனங்கள் மற்றும் டிப்பர் லாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பால், வாலாஜாபாத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என, மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - சதுரங்கப்பட்டினம் சாலை, 448 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இதில், 141. 59 கோடி ரூபாய் புறவழிச் சாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2022ம் ஆண்டு சாலை விரிவுபடுத்தும் பணி துவங்கியது. இதை ஏற்று, ரயில்வே துறை நிர்வாகம், கிதிரிப்பேட்டை ரயில் கடவுப்பாதையோரம் இருக்கும் சிக்னல் கம்பங்களில் இருக்கும் கேபிள்களை மாற்றி அமைக்கும் பணிக்கு, பிளாஸ்டிக் பைப் புதைக்கும் பணி துவக்கி உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி