ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

66பார்த்தது
ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
பிரபல ரவுடி பாம் சரவணனுக்கு வருகிற ஜனவரி 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரவுடி பாம் சரவணனை நேற்று போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப்பிடித்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த பாம் சரவணனை, ஆந்திராவில் இருந்து போலீசார் சென்னை அழைத்து வந்த போது தப்ப முயற்சித்தார். அப்போது துப்பாக்கிச்சூடு நடந்தது.

தொடர்புடைய செய்தி