துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடு செய்வதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று (ஜன., 17) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்படுகிறது. துணைவேந்தர் நியமனங்கள் மீது ஆளுநர்களுக்கு பரந்த கட்டுப்பாட்டை வழங்குவது "கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.