ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப்போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். மேலும் தங்கள் கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்காது என கூறியுள்ள அவர், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே தவெகவின் இலக்கு என தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன.