கேரளா: எர்ணாகுளம் சேந்தமங்கலத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இதில் வேணு, வினிஷா, உஷா ஆகியோர் உயிரிழந்தனர். சம்பவத்தில் ரிது (28) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வினிஷாவின் கணவர் ஜிதின் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அக்கம்பக்கத்தினரிடையே ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.