தாந்தோணியம்மன் கோவிலில் 508 பால்குடம் எடுத்து வழிபாடு

53பார்த்தது
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தாந்தோணியம்மன் கோவிலில் 508 பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு.

செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரம் அருகே சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற தாந்தோணி அம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பரனுர் அருகே வீரபுரம் பகுதியில் அமைந்துள்ளது
தாந்தோணியம்மன் கோவில் இந்த கோவிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டால் கடன் தொல்லை தீரும், திருமணத்தடை நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை

இந்த நிலையில் இன்று சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தாந்தோணி அம்மன் கோவிலில் இருந்து 508 பால் குடத்தை பக்தர்கள் தலையில் ஏந்தி பாதயாத்திரை ஆக நடந்து சென்று செங்கழுநீ அம்மன் மீது ஊற்றி வழிபட்டனர்
இந்த நிகழ்வில் வீராபுரம் மகேந்திரா சிட்டி பரனுர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி