ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் 59-ஆம்
ஆண்டு காவடி மற்றும் அழகு குத்துதல் திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கிளியாநகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை முன்னிட்டு பரணி காவடி எடுப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு 59-ஆம் ஆண்டு காவடி மற்றும் அழகு குத்துதல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த காவடி திருவிழாவை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று. முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அழகு குத்தியும், முதுகில் முள் குத்தியும் பக்தர்கள் முருக பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.