துபாய் ரேஸில் வெற்றிப் பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு, துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் உங்களின் வெற்றி தொடர்ந்து பெருமை சேர்க்கட்டும்” என்றார். துபாய் 24H கார் ரேஸில் போர்ஷே 992 கப் கார் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் அணி 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. அஜித்குமாரின் இந்த வெற்றிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.