நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஓய்வு வயதை எட்டி விட்டார் என்று நினைக்கிறேன் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "அரசியலில் ஒரு வயது வந்தவுடன் ஓய்வளிக்க வேண்டும் என்பதற்கு கிளாசிக் உதாரணம் துரைமுருகன். சில தலைவர்களுக்கு ரிட்டயர்மென்ட் கொடுத்து விடலாம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மேடையிலேயே கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.