தமிழறிஞரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் துணைவியார் ஜெயபாய் இன்று காலமானார். அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “சாலமன் பாப்பையாவின் துணைவியார் ஜெயபாய் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். உற்ற துணையான வாழ்விணையரை இழந்து தவிக்கும் சாலமன் பாப்பையா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.