சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் விபத்து அபாயம்

84பார்த்தது
சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் விபத்து அபாயம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பெரியவெண்மணி, தொன்னாடு, வேட்டூர், சரவம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், தனியாருக்கு சொந்தமான கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

இத்தொழிற்சாலைகளில் இருந்து லாரிகள் வாயிலாக, செய்யூர், மதுராந்தகம் வழியாக மாமல்லபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு, ஜல்லிக்கற்கள் மற்றும் 'எம். சாண்ட்' உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.

பெரும்பாலான லாரிகளில் அதிக அளவு பாரம் ஏற்றுவதோடு, தார்ப்பாய் மூடாமல் செல்வதால், லாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள் மற்றும் 'எம். சாண்ட்' மணல் போன்றவை சாலையில் கொட்டுகின்றன.

சாலையில் கொட்டும் ஜல்லிக்கற்கள் மற்றும் 'எம். சாண்ட்' மணல், சாலை ஓரத்தில் குவிந்து உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலை ஓரத்தில் குவிந்துள்ள ஜல்லிக்கற்களால் பிரேக் பிடிக்க முடியாமல் விபத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், சாலை ஓரத்தில் குவிந்துள்ள ஜல்லிக்கற்களை அகற்றவும், அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி