செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் தலைமையில் (19. 07. 2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு சுமார் 130 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
கோரிக்கைகள்:
மழைக்காலம் நெருங்குவதனால் ஏரி, குளங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். மேலும் ஏரி, குளங்களை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், விவசாய நிலங்களின் அருகில் உள்ள பழைய மின்கம்பங்களை பழுது நீக்கி அல்லது மாற்றிட மின்சார வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
பங்கேற்றவர்கள்:
இக்கூட்டத்தில், சார் ஆட்சியர் நாராயண சர்மா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், வேளாண்மை இணை இயக்குநர் ஆர். அசோக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ரேணுகா மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.