சேதமடைந்த 'மேன்ஹோல்' மாநகராட்சி சீரமைக்குமா?

62பார்த்தது
சேதமடைந்த 'மேன்ஹோல்' மாநகராட்சி சீரமைக்குமா?
காஞ்சிபுரம் தாயார்குளம் தெருவில் உள்ள வீடுகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்டு குழாயில் குடிநீர் திறந்து விடுவதற்காக 'கேட்வால்வு' பொருத்தப்பட்டுள்ள 'மேன்ஹோல்' உள்ளது.

கடந்த மாதம், அவ்வழியாக சென்ற கனரக வாகனம் மோதியதில், 'மேன்ஹோல்' ஒரு பகுதி உடைந்துவிட்டது. இதனால், அதன்மீது மூடப்பட்டுள்ள சிமென்ட் சிலாப் சாய்ந்துள்ளது.

போதுமான மின்விளக்கு வசதி இல்லாத அப்பகுதியில், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் உடைந்த நிலையில் உள்ள மேன்ஹோலில் மோதி விபத்தில் சிக்குகின்றனர். மேன்ஹோலை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி