வெளிநாட்டு புவியியல் ஆராய்ச்சியாளரிடம் விசாரணை

59பார்த்தது
சென்னை விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் குளறுபடியான சோதனையால், ஜெர்மன் நாட்டு பயணி உட்பட இரண்டு பயணிகள், வைத்திருந்த நீர்மட்ட அளவை கண்டுபிடிக்கும் கருவிகளை, சாட்டிலைட் போன்கள் என்று கருதி, விமானத்திலிருந்து ஆப்லோடு செய்து, சென்னை விமான நிலைய போலீசில் ஓப்படைத்தனர்.

விமான நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் வைத்திருந்தது அதற்கான நீர்நிலைகளை அறிவதற்கான கருவிகள். அவைகள் சாட்டிலைட் போன்கள் இல்லை என்ற உண்மை தெரிய வந்ததால், போலீசார் இருவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் விடுவித்தனர்.

ஆனாலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் குளறுபடி காரணமாக, தேவை இல்லாமல் வெளிநாட்டு பயணி உட்பட இருவர், ஆப்லோட் செய்யப்பட்டு, அந்த விமானமும் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்று, சக பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்குக் காரணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பலருக்கு, ஹிந்தி மொழி தவிர வேறு எதுவும் தெரியாததால், ஏற்படும் பிரச்சனை என்று கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி