ஹைதராபாத் KPHB-யில் ஒருவர் மது போதையில் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உணவகம் ஒன்றில் பணம் தராமல் உணவு கேட்டதற்கு ஓட்டல் உரிமையாளர் மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த குடிமகன் உரிமையாளரை தாக்கினான். கையிலிருந்த ஹெல்மெட்டால் அடித்து, அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்தான். அப்போது அங்கு வந்த காவலர் அவரை தடுக்க முயன்றார். அப்போது அந்த காவலரையும் அந்த நபர் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.