அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. நடிகர் அதிரடி

72பார்த்தது
அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. நடிகர் அதிரடி
மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, சாலையோரங்களில் வசிக்கக்கூடிய சாலையோர வாசிகளுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நகைச்சுவை நடிகர் வையாபுரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திரைப்பட ஷூட்டிங் இல்லாமல் இருந்து, வாய்ப்பு கிடைக்குமேயானால் நிச்சயம் ஒரே கட்சி ஒரே கொள்கை என்று இருக்கக்கூடிய அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திற்கு நான் வருவேன்” என கூறியுள்ளார். மேலும், எனது பிரச்சாரம் பிற கட்சியினர் அல்லது பிற நபர்களையோ வசை பாடுவது குறித்து இருக்காது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி