பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம்

79பார்த்தது
பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம்
பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரி, 2016ம் ஆண்டு துவக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இங்கு, பி. ஏ. , தமிழ், ஆங்கிலம், பி. எஸ்சி. , கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஐந்து அரசு கல்லுாரிகள் வரை விண்ணப்பிக்க, 50 ரூபாய் மற்றும் எஸ். சி. , - எஸ். டி. , மாணவ - மாணவியருக்கு 2 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

தனியார் நெட் சென்டர்களில் விண்ணப்பிக்க மட்டும், 300 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால், கல்லுாரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் துவக்கப்பட்டு உள்ளது.

இங்கு, இலவசமாக விண்ணப்பிக்கப்படும். வரும் 20ம் தேதி வரை, அலுவலக நாட்களில், காலை 10: 30 முதல் மாலை 3: 30 மணி வரை சேர்க்கை மையம் செயல்படும். உரிய சான்றிதழ், அரசு நிர்ணயித்த கட்டணத்துடன் வர வேண்டும் என, கல்லுாரி முதல்வர் சக்தி கூறினார்.

தொடர்புடைய செய்தி