தற்போதைய காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கும் மாரடைப்பு வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகரில் இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. ஷாருக் மிர்சா (24) என்ற இளைஞர் நெஞ்சுவலி காரணமாக காலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனை பூட்டி இருந்ததால் வெளியில் காத்திருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அங்கேயே சுருண்டு விழுந்த அவர் மருத்துவமனை வாசலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.