கற்கால கருவிகள் உருவாக்கிய பட்டறை கண்டுபிடிப்பு

52பார்த்தது
கற்கால கருவிகள் உருவாக்கிய பட்டறை கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே, கற்கால கருவிகள் உருவாக்கிய பட்டறை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் வெற்றித்தமிழன் மற்றும் பிரேம், சரண் ஆகியோர் அடங்கிய குழுவினர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொல்லியல் தடயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் ஒன்றியம், நாய்க்கன்குப்பம் அருகே ஒடந்தாங்கல் ஏரியையொட்டி கள ஆய்வு நேற்று (செப் 28) மேற்கொண்டனர்.

அப்போது, அப்பகுதியில், நிலைகளையொட்டிய பல பகுதிகளில், குவியல், குவியலாக உடைந்து சிதைந்த கற்கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்புடைய செய்தி