இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் பத்தாவது ஓவரில் அறிமுகப்படுத்தப்பட்ட கமிந்து மெண்டிஸ் சூர்யகுமார் யாதவிற்கு இடது கையிலும், ரிஷப் பண்டிற்கு வலது கையிலும் மாறி மாறி பந்து வீசினார். இது மைதானத்தில் இருந்தவர்களையும், டிவியில் பார்த்த அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. முதல் பந்தில் ஒரு பவுண்டரி போனாலும், அந்த ஓவரை சிறப்பாக வீசி இருந்தார் கமிந்து மெண்டிஸ்.