கல்கி படத்தில் நடிக்க ஒரு வருடம் யோசித்த கமல்!

69பார்த்தது
கல்கி படத்தில் நடிக்க ஒரு வருடம் யோசித்த கமல்!
கல்கி படத்தின் ப்ரோமோஷனில் பேசிய பிரபாஸ், 'கல்கி படத்தில் நடிப்பதற்கு கமல் சார் ஒரு வருடம் யோசித்தார். அவரை டார்ச்சர் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன்' என்றார். இதனையடுத்து பேசிய கமல் ஹாசன், "டார்ச்சர் எல்லாம் இல்லை. என் மீது சந்தேகம் எனக்கே இருந்தது. அமிதாப் நடித்திருக்கிறார் பிரபாஸ் நடித்திருக்கிறார். அப்படி இருக்கும்போது நான் என்ன செய்யப்போகிறேன் என்பதே அதற்கு காரணம். இதற்கு முன்பு நான் கெட்டவனாக நடித்ததே இல்லை என்று சொல்லவில்லை. கெட்ட ஹீரோ, சைக்கோ உள்ளிட்ட கேரக்டர்களை செய்திருக்கிறேன். ஆனால் இது வேறு மாதிரியானது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி