உளுந்தூர்பேட்டை: பேருந்து மோதி வாலிபர் பலி

84பார்த்தது
உளுந்தம்படி தாலுகா, வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விக்னேஷ், 26; எலவனாசூர்கோட்டையில் சலூன் கடை வைத்திருந்தார்.
நேற்று காலை 10: 45 மணியளவில், உளுந்துார்பேட்டையில் இருந்து வெள்ளையூருக்கு பைக்கில் எம். எஸ். , தக்கா அருகே சென்றபோது, கடலூர் நோக்கி சென்ற தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில் விக்னேஷ் படுகாயமடைந்தார்.


அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி