பரிக்கல் 9ம் தேதி பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

74பார்த்தது
பரிக்கல் 9ம் தேதி பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பரிக்கல் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நடைபெறுகிறத. இந்து சமயஅறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, இந்தக் கோயிலில் மூன்றுநிலை ராஜகோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடா்ந்து திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா (சம்புரோக்ஷ்ணம்) ஜூன் 9-ஆம் நடத்தப்படவுள்ளது. இதையடுத்து கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூா்வாங்க பூஜை இன்று தொடக்கம்: இந்தக் கோயில் சம்புரோக்ஷ்ணத்துக்கான பூா்வாங்க பூஜைகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) மாலை 5 மணிக்குத் தொடங்குகின்றன. சனிக்கிழமை (ஜூன் 8) காலை 7 மணிக்கு கும்ப திருவாராதனம், ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த பிறகு, பூா்ணாஹுதியும், யாத்ரா தானமும் நடைபெறும். இதைத் தொடா்ந்து யாகசாலையிலிருந்து கும்பங்கள் புறப்பாடாகும். இதையடுத்து காலை 6. 30 மணிக்கு மேல் காலை 8 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு (சம்புரோக்ஷ்ணம்), கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்படும். இரவு 7 மணிக்கு கருடசேவை நடைபெறும்

தொடர்புடைய செய்தி