உளுந்துார்பேட்டையில் அனுமதியின்றி கொடி கம்பங்கள் நட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். நடிகர் விஜய் தமிழர் வெற்றிக் கழகம் கட்சியை துவக்கி உள்ளார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை பகுதியில் அலங்கிரி, நெடுமானுார், புத்த மங்கலம் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை விஜய் ரசிகர் மன்றம் மற்றும் கட்சி நிர்வாகிகள் போலீஸ் அனுமதியின்றி கொடிக் கம்பங்கள் நட்டனர்.
அதனை அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் அதனை அகற்றினர்.
அதனைத் தொடர்ந்து அனுமதியின்றி கொடி கம்பங்களை நட்டதாக எலவனாசூர்கோட்டை போலீசார் மாவட்ட தலைவர் பரணிபாலாஜி, செயலாளர் மோகன், தலைவர் பழனிவேல், நிர்வாகி ஆசாத் ஆகியோர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
அதேபோல் திருநாவலுார் பகுதியில் ஈஸ்வரகண்டநல்லுார், மட்டிகை பகுதியில் நடப்பட்ட கொடி கம்பத்தை திருநாவலுார் போலீசார் அகற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.