பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

72பார்த்தது
பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணை பகுதியில் அரசு பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிட பள்ளியில் கல்வராயன்மலை மற்றும் கச்சிராயபாளையம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். பள்ளியில் நேற்று ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி மற்றும் விடுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி