சங்கராபுரம்: போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்

72பார்த்தது
சங்கராபுரம் பகுதியில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

சங்கராபுரம் நகரைச் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை அதிகளவில் நடக்கிறது. வெளியூரிலிருந்து ஒரு பாக்கெட் 15 ரூபாய்க்கு வாங்கி வந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதனை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வாங்கி உபயோகித்து போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.


அதுமட்டுமின்றி கஞ்சாவை கடத்தி வந்து பள்ளி, கல்லுாரி பகுதிகளில் விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. இது பெற்றோர்களை கவலையடையச் செய்துள்ளது. கடைகளில் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் அடிக்கடி திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாக செயல்படுகின்றனர்.


போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க மாவட்ட எஸ். பி. , விரைந்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி