கள்ளக்குறிச்சி பகுதியில் பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொது இடங்கள் மற்றும் வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வது வழக்கமாகும். இன்று(7 ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழாவைவையொட்டி சிலைகள் வாங்குவது, சிலை வைக்கும் இடத்தில் பந்தல் அமைத்தல் உள்ளிட்ட விழா கொண்டாடத்திற்கான பணிகளில் இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் வீடுகளில் வழிபாடு செய்ய சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மந்தைவெளி, காய்கறி மார்க்கெட், அண்ணா நகர் ஆகிய பல இடங்களில், தற்காலிக கடைகள் அமைத்து, களி மண்ணில் தயாரித்த பல்வேறு வண்ணங்கள் கொண்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது. அரை அடி முதல், இரண்டு அடி வரை சிலை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சிலை 150 முதல், 3, 000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு, விநாயகர் சிலைகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அதேபோல் வழிபாட்டிற்கு தேவையான பல்வேறு வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. குடியிருப்பு வாசிகள் பலர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.