தீ விபத்தில் கரும்பு பயிர்கள் சேதம்

82பார்த்தது
தீ விபத்தில் கரும்பு பயிர்கள் சேதம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது கரும்பு தோட்டம் நேற்று திடிரென தீ பிடித்து எரிய தொடங்கியது. காற்று அதிகமாக வீசியதால், அவருக்கு பக்கத்தில் இருந்த நடராஜன், மதிவாணனண ஆகியோரது கரும்பு வயலுக்கும் தீ பரவியது.

இதுபற்றி தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர்(பொ) ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ரு. 1 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் தீயில் கருகி சேதமடைந்தது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி