பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம்

50பார்த்தது
பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம்
பாராளுமன்ற பொதுத்தேர்தலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பொதுமக்கள் குறைத்தீர்வு நாள் முகாம் வருகின்ற திங்கட்கிழமை தோறும் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தகவல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, 2024
பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்த காரணத்தினால் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீர்வு நாள் முகாம் தற்காலிகமாக
ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள்
விலக்கிக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் எதிர்வரும், (10. 06. 2024) திங்கட்கிழமை முதல் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்வு நாள் முகாம் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரடியாக வழங்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார்,
தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி