புதுபாலப்பட்டு-பழையபாலப்பட்டு தார்சாலை கற்கல் பெயர்ந்து குண்டும் குழியுமாய் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு-கள்ளிப்பட்டு தார் சாலை வழியாக பழையபாலப்பட்டு, கள்ளிப்பட்டு, துருர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த சாலை வழியாக பொது மக்கள் அதிக அளவில் செல்கின்றனர். இந்த சாலை குண்டும், குழியுமாய், கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் ஓட்டி செல்வதால் வாகனத்துடன் கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தார் சாலை சீர் செய்யப்படாததால் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. படுமோசமான நிலையில் உள்ள புதுபாலப்பட்டு-பழையபாலப்பட்டு சாலையை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.