சின்னசேலம் அடுத்த கருந்தலாக்குறிச்சியில் உள்ள கமலா அம்பிகை அம்மன் உடனுறை கயிலாயநாதர் கோவிலில் கடந்த 6ம் தேதி முளைப்பாரி, புன்னிய தீர்த்தம், விநாயகர் வேள்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கும்பாபிேஷகம் தொடங்கியது. 7ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜை, வேள்வி நிறைவு பேரொளி வழிபாடு திருமுறை விண்ணப்பம், மாலை மூன்றாம் கால பூஜை, விமான கலசம் நிறுவுதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, நேற்று (செப்.7) காலை நான்காம் கால வேள்வி பூஜையும், திருக்குடம் புறப்பாடும் நடந்தது. காலை 8. 40 மணியளவில் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.