கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் தமிழக அரசால் நேற்று வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய மாவட்ட அலுவலர் ஆய்வு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த வாகனமானது மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பை மேன்மைப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.