யோகி ஆதித்யநாத் அரசை கடும் குற்றஞ்சாட்டிய ஜெயராம் ரமேஷ்

54பார்த்தது
யோகி ஆதித்யநாத் அரசை கடும் குற்றஞ்சாட்டிய ஜெயராம் ரமேஷ்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அக்பர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களில் 1800 வீடுகளை யோகி ஆதித்யநாத் அரசு இடித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், வாரணாசியின் அசி காலனியிலும் 300 வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜூன் 4ஆம் தேதி வெளிவந்த தேர்தல் முடிவுகளை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று தெரிகிறது. மக்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கை கொடூரமாக அழிக்கப்படுகிறது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி