பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணிகள் நிறைவு பெற்றது. ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக நடைபெற்றது. 8 மணி நேரமாக நடைபெற்ற மதிப்பீடு பணி முடிவடைந்து, ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 1000 ஏக்கர் நில ஆவணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சீல் வைக்கப்பட்ட பெட்டிகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பலத்த பாதுகாப்புடன் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர உள்ளனர்.