ஸ்பேட் எக்ஸ் விண்கலன் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து நேற்று (டிச.30) பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 15 நிமிடம் 15 விநாடிகளில் ஸ்பேட்எக்ஸ் பி விண்கலனும், 15 நிமிடம் 20 விநாடிகளில் ஸ்பேட்எக்ஸ் ஏ விண்கலனும் பிரிந்து பூமியில் இருந்து 475 கி.மீ. உயரத்தில் திட்டமிடப்பட்ட புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜன.7ம் தேதி அன்று விண்கலன்கள் ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.