மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இல்லாமலேயே இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனுக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர், "மாக்ரோன் போன்ற மேற்கத்திய தலைவர்கள் இப்போது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடைக்கு அழைப்பு விடுப்பது அவமானகரமான ஒன்று. உங்களின் ஆதரவு இல்லாமலும், இஸ்ரேல் போரில் வெல்லும். ஆனால், உங்களின் அவமானம் போருக்குப் பின்னரும் தொடரும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.