சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய சவாலே சர்க்கரை அளவை குறைப்பது தான். எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் சிலருக்கு சர்க்கரை குறைவதில்லை. முதலில் மாவுச்சத்து உணவுகளை குறைக்க வேண்டும். அதற்கு பதிலாக புரதம், காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பால் கலந்த காபி, டீயை விடுத்து பால் சேர்க்காதவற்றை அருந்தலாம். மேலும் மோர், சூப் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொண்டு வயிற்றை நிரப்பி கொள்ள வேண்டும். 3 வேளை உணவை, 6 வேளையாக மாற்றி சாப்பிடவும்.