டி20 உலகக் கோப்பை-2024 முதல் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷதீப் திரில் காட்டி வருகிறார். அயர்லாந்து பேட்டர்களை திணறடித்து இந்திய அணியை உற்சாகப்படுத்தியுள்ளார். தனது இரண்டாவது ஓவரிலேயே இரண்டு அயர்லாந்து பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினார் அர்ஷதீப். முதல் பந்தில் பால் ஸ்டிர்லிங்கையும் கடைசி பந்தில் ஆண்ட்ரூ பால்பிர்னியையும் அவுட்டாக்கினார். இதனால் அயர்லாந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தொடக்க வீரர்களை இழந்தது.