நடுவீட்டில் மலம் கழித்து விட்டு சென்ற திருடன்

17856பார்த்தது
நடுவீட்டில் மலம் கழித்து விட்டு சென்ற திருடன்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலை உலியம்பாளையம் பகுதியில் வசித்துவரும் ஞானசுந்தரம் திங்கள்கிழமை உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்குள் நேற்று முன்தினம் (மே 20) இரவு புகுந்த திருடன் அவரது படுக்கை அறையில் இருந்த பீரோவில் இருந்து பணம் நகையை திருடி சென்றுள்ளான். இந்நிலையில் இன்று காலை வீட்டிற்கு வந்த ஞானசுந்தரம் நகை பணம் திருடு போனதை அறிந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் 22 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. மேலும் கொள்ளையன் நடு வீட்டில் மலம் கழித்துவிட்டு சென்றுள்ளான். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி