பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா, பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் உடன் மோதினார். முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜிரி லெஹெக்கா கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட் 4-4 என சமனில் இருந்த போது காயம் காரணமாக டிமிட்ரோவ் வெளியேறினார். இதன் காரணமாக ஜிரி லெஹெக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.