சென்னை விமான நிலையத்திற்கான சேவைகளை சில சர்வதேச நிறுவனங்கள் குறைத்துவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் எண்ணிக்கை 15% குறைந்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை விமான நிலைய முனையத்தில் 13 விமான பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், மார்ச் மாதத்திற்குள் இப்பணிகள் நிறைவடைந்தபின் விமான சேவைகள் மீண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.