செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

84பார்த்தது
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியும், வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமைச்சராக இல்லாவிட்டாலும் எம்எல்ஏவாக தொடர்வதால், ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை பாதிக்கும் என்றும், சாட்சிகள் கலைக்கப்படலாம் எனவும் அமலாக்கத்துறை தெரிவித்து வருகிறது.

இது தொடர்பான விசாரணை நேற்று (மே 15) நடைபெற இருந்த நிலையில், இன்றைக்கு (மே 16) ஒத்திவைக்கப்பட்டது.