இனோவா கார் பரிசு - முன்னாள் அமைச்சர் அறிவிப்பு

66பார்த்தது
இனோவா கார் பரிசு - முன்னாள் அமைச்சர் அறிவிப்பு
திருச்சி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தால், நகரச் செயலாளருக்கு இன்னோவா காரும், வட்டச் செயலாளருக்கு 5 சவரன் தங்க சங்கிலியும் வழங்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார். திருச்சியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞரான கருப்பையா என்பவருக்கு எடப்பாடி பழனிச்சாமி வாய்ப்பு வழங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக சி. விஜயபாஸ்கர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி