கிழக்கு லடாக்கில் புதிய ஆயுதங்களை குவிக்கும் இந்திய ராணுவம்

264பார்த்தது
கிழக்கு லடாக்கில் புதிய ஆயுதங்களை குவிக்கும் இந்திய ராணுவம்
கிழக்கு லடாக் செக்டரில் 50,000 துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவம் அதன் பலத்தை வலுப்படுத்த M4 விரைவு எதிர்வினை வாகனங்கள் மற்றும் தனுஷ் ஹோவிட்சர்கள் போன்ற புதிய ஆயுத அமைப்புகளைச் சேர்த்துள்ளது. சுமார் 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ள நியோமா ராணுவ நிலையத்தில் அங்கு நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களுக்கு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு புதிய போர் உபகரணங்களுடன் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சமீப காலங்களில், இந்திய ராணுவம் பல புதிய உபகரணங்கள் மற்றும் அமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் எல்லையில் சீனாவின் ராணுவம் அத்துமீறும் நிலையில், இந்தியா தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்தி