இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு முஸ்லிம் நாடாக உள்ளது. இங்கு சுமார் 6 லட்சம் மக்களே வசிக்கின்றனர். இங்கு இஸ்லாமிய வழிபாட்டைத் தவிர்த்து அனைத்து மத வழிபாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நாட்டு சட்டத்தின்படி கோயில்கள், தேவாலயங்கள், சீக்கிய குருத்வாராக்கள் என எதையும் கட்ட முடியாது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இங்கு குடியுரிமையும் வழங்கப்படுவதில்லை. இந்து மற்றும் புத்த மத கட்டுப்பாட்டில் இருந்த இந்த நாடு கிபி 1153-ல் இஸ்லாமிய நாடாக மாறியது.