மகளிர் தினமான நேற்று (மார்ச். 08) பிரான்ஸில் பெண்கள் நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தலைநகர் பாரீஸில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் பாசிசம் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டிய அவர்கள் அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள், மேலாடையின்றி அவர்கள் தெருவில் பேரணியாகவும் சென்றதை காண முடிந்தது.