2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக இன்று மாலை நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்தை, வரும் 7ஆம் தேதிக்கு ICC ஒத்திவைத்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் சூழலில், அந்நாட்டிற்கு தங்கள் வீரர்களை அனுப்ப மாட்டோம் என இந்தியா தெரிவித்துள்ளது. IND அணியின் போட்டிகளை மட்டும் ஹைபிரிட் மாடலில் வெளிநாடுகளில் நடத்துவதற்கும் பாக்., நிபந்தனைகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.